State should consult Educationists, Political Parties on NEP2016

அன்புடையீர்! வணக்கம் .
இந்திய அரசின் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் புதிய கல்விக்கொள்கை உருவாக்க சில கொள்கை முன்மொழிவுகளை தனது வலை தளத்தில் வெளியிட்டுள்ளது .

இந்த ஆவணத்தின்மீது பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம் என கூறியுள்ளது. ஆவணம் ஆங்கிலத்தில் மட்டும் உள்ள போது பொதுமக்கள் எவ்வாறு  கருத்து கூற இயலும் .

கருத்துக்கூற கொடுக்கப்பட்ட கால அவகாசமும் மிகக்குறைவு . எனவே , தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியிட்டு கருத்து சொல்ல கால அவகாசத்தை 6 மாதத்திற்கு நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை மனுவை பிரதமருக்கும் , மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சருக்கும் பொதுப் பள்ளிக்கான மாநில மேடை அனுப்பியுள்ளது.

மேலும் , மாநில அரசுகளிடம் கருத்து கேட்கப்படும் எனவும் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார் .

ஆவணத்தில்   கூறப்பட்ட பல  முன்மொழிவுகள் மாநில அரசின் அதிகாரங்களை மத்திய அரசு எடுத்துக்கொள்வதாக அமைந்துள்ளது . கூட்டாட்ச்சித்தத்துவத்தின் அடிப்படையில் மாநில அரசின் கல்வித்துறையில் கொள்கையெடுக்கும் முடிவினை இனி இல்லாமல் செய்யும் பல பாதகமான அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.

தமிழ் நாடு அரசு  மத்திய அரசிறிக்கு தன் கருத்தை சொல்வதற்கு முன்பு மாநில மக்களின் கருத்தை கேட்க வேண்டும் .

குழந்தைகளின் எதிர்காலம் குறித்த மிக முக்கிய கொள்கை ஆவணம் என்பதால்  ஆசிரியர் , மாணவர் , பெற்றோர் , மாநிலத்தின் கல்வியாளர்கள் மற்றும் அனைத்து காட்சிகளையும் கலந்தாலோசித்து முடி வெடுக்கவேண்டும் என தமிழ் நாடு அரசை பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.

இது குறித்து இந்திய பிரதமர்தமிழ் நாடு முதல்வர் ஆகியோருக்கு அனுப்பிய கடிதம் இணைக்கப்பட்டுள்ளது .

பு . பா . பிரின்ஸ் கஜேந்திர பாபு ,
பொதுச் செயலாளர் ,
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை.
9445683660