பொதுப்பள்ளிக்கான மாநில மேடை

சமூகப் பொறுப்புடன் இயங்கிக் கொண்டிருக்கும் கல்வியாளர்கள், கல்வி ஆர்வலர்கள் இணைந்து உருவாக்கிய பொதுப்பள்ளிக்கான மாநில மேடை என்ற இந்த அமைப்பு இந்தியா முழுவதும் ‘அருகமைப்பள்ளி அமைப்பைக் கொண்டத் தாய்மொழி வழிப் பொதுப்பள்ளி’ முறை நடைமுறைக்கு வரப் பாடுபடுகிறது.

இந்நோக்கம் நிறைவேற பணியாற்றிவரும் அனைவரும் (தனிநபர் அமைப்பு) இவ்வமைப்பில் இணைந்து செயல்படலாம்.

We are a group of educationist and educational activists.

State platform for common school system was established to bring together various individuals who are working for making education costless and compulsory.

Anyone – Individual or organisation willing to raise their voice for the implementation of common school system with neighborhood schools and mother tongue as Medium of instruction are welcome to join the forum.

Activities so far

இந்தியா முழுக்க அருகமைப்பள்ளி அமைப்பைக் கொண்டத் தாய்மொழி வழிப் பொதுப்பள்ளி முறைக்கான போராட்டம் நடக்கையில் தமிழகத்தில், மாநில அரசே நான்கு வகைப் பாடத்திட்டம், பாடநூல், வாரியம், தேர்வுமுறை என வைத்திருப்பது மேலும் சிக்கலான ஒன்றாக அமைந்துள்ளது. இந்நிலையை மாற்றி இந்தியாவின் பிற மாநிலங்கள் போல் ஒரே வாரியம் பாடத் திட்டம், தேர்வு முறை என மாநிலப் பள்ளிக் கல்வி முறை அமைய வேண்டும்.

அனைவர்க்கும் தரமான கல்வியைச் சமச்சீராக கிடைக்கச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கையைக் கடந்த சட்டமன்றத் தேர்தலின் முன் வலுவாக எழுப்பினோம். பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து பணியாற்றினோம்.

தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் ‘சமச்சீர் கல்வி’ நடைமுறைப்படுத்தப்படுவதாக அறிவித்தது.

இதை ஆதரித்து எழுத்தாளர்கள் சார்பில் ஒரு கூட்டம் நடைபெற்றது. மறைந்த மூத்த எழுத்தாளர் வல்லிக்கண்ணன் தலைமையில் தி.மு.க. தலைவரை அறிவாலயத்தில் சந்தித்து ஆதரவும் தெரிவிக்கப்பட்டது.

வெற்றி பெற்ற பின் ‘சிகரம்’ ச. செந்தில்நாதன், ‘முகம்’ மாமணி உட்பட கவிஞர் வா.மு. சேதுராமன் ஏற்பாட்டில் முதல் அமைச்சரை அறிவாலயத்தில் 25.06.2006 அன்று சந்தித்த குழுவில் இடம் பெற்றிருந்த பு. பா. பிரின்ஸ் கஜேந்திரபாபு மேற்சொன்ன கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்.

‘சமச்சீர் கல்வி’ நடைமுறைப்படுத்த பரிந்துரைக்க முனைவர் ச. முத்துக்குமரன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. அக்குழு சென்னையில் நடத்திய பொது விசாரணையிலும் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கப்பட்டது. குழுத் தயாரித்த அறிக்கையை அரசு பெறாமலேயே காலம் கடத்திய நிலையில் களத்தில் இறங்கிப் போராடத் தொடங்கினோம்.

கருத்தரங்கங்கள், மனிதச் சங்கிலி, தூரிகை முழக்கம் எனப் பல இயக்கங்களைப் பல்வேறு அமைப்புகளுடன் இணைந்து நடத்தினோம். தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற பல்வேறு இயக்கத்தின் பயனாய் ‘சமச்சீர்கல்வி’ என்ற பெயரில் பொதுப் பாடத்திட்டத்தை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

பொதுப் பாடத்திட்டத்தை வரவேற்கும் அதே வேளையில் ‘சமச்சீர்கல்வி’யை அதன் உண்மையான, முழுமையான பொருளில் நடைமுறைப்படுத்த அரசை வலியுறுத்தும் நமது போராட்டம் தொடரும்.

Joint efforts and struggles forced Tamilnadu Government to announce common syllabus. Our struggle will continue till the implementation of equitable Standard Education in its real sense.