முழு அடைப்பு போராட்டத்தில் ஆசிரியர் மாணவர் பங்கேற்க வேண்டும்

ஆற்று நீர் பிரச்சனை உழைக்கும் மக்களை பிளவு படுத்தக் கூடாது!

செப்டம்பர் 16 முழு அடைப்பு போராட்டத்தில் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக மாணவர், ஆசிரியர் பங்கேற்க வேண்டும்!
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வேண்டுகோள்!

விவசாய சங்கம், வணிகர் சங்கம் விடுத்துள்ள முழு அடைப்பு போராட்டம் நம் வாழ்வாதார நலன் சார்ந்த போராட்ட அழைப்பு.

கர்நாடகாவில் நடக்கும் சம்பவங்கள் மிகவும் கவலை தரக்கூடியன. மக்களை பிளவு படுத்தி முக்கிய சிக்கலில் இருந்தது மக்கள் கவனத்தை திசை  திருப்பும் முயற்ச்சி. காவிரி நீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண  மேம்பாட்டு ஆணையத்தையும், காவிரி நீர் ஒழுங்குமுறை குழுவையும் இந்திய அரசு உருவாக்கி இருக்க வேண்டும். இது நாள் வரை அதை அரசு செய்யவில்லை. ஒவ்வொரு ஆண்டும் இத்தகைய சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்வது விவசாயத்திற்கும் , விவசாயிக்கும், நாட்டிற்கும் நல்லது அல்ல. விவசாய மக்கள் சார்பாக விடுக்கப்பட்டுள்ள முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற பொதுப் பள்ளிக்கான மாநில மேடை தனது முழு ஆதரவையும் தெரிவிக்கிறது.

இப்போராட்டம்  நடைபெறும் செப்டம்பர் 16 அன்று நடக்கவிருக்கும் பள்ளி, கல்லுரி தேர்வுகளை தமிழ் நாடு அரசு தள்ளிவைக்க வேண்டும். பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழக ஆசிரியரும், மாணவரும் முழுமையாக கலந்துக்கொண்டு முழு அடைப்பு போராட்டம் வெற்றி பெற வைக்க வேண்டும். நதி நீர் பிரச்சனை இனி விவசாயிகளின் சிக்கல் மட்டும் அல்ல  ஒட்டுமொத்த சமுகத்தின் சிக்கல் என்பதை அனைவரும்  உணரச் செய்வோம்.

பு.பா. பிரின்ஸ் கஜேந்திர பாபு,
பொதுச் செயலாளர்,
பொதுப் பள்ளிக்கான மாநில மேடை.