சாதி, மதம் கடந்து நேர்மையாக வாக்களிப்போம்! பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வேண்டுகோள்!

“முரண்பாடுகள் நிறைந்த இந்த வாழ்க்கையை எத்தனை காலம்தான் வாழப் போகின்றோம். நமது சமுக வாழ்க்கையிலும் பொருளாதார வாழ்க்கையிலும், சமத்துவம் அற்ற இந்த ஏற்றத் தாழ்வுகளை நாம் தொடர்ந்து அனுமதித்தால் நமது அரசியல் ஜனநாயகம் என்பது ஆபத்திற்குள்ளாகும். இந்த முரண்பாடுகளை நாம் விரைவில் களைய வேண்டும். இல்லையென்றால் இந்த சமத்துவமற்ற நிலையால் பாதிக்கப்படும் மக்கள் இந்த அரசியல் ஜனநாயக அமைப்பை உடைத்து நொறுக்குவார்கள். நாம் அரும்பாடுப்பட்டு வடிவமைத்த இந்த சட்ட அமைப்பு நொறுங்கும்”. 1949, நவம்பர் 25 அன்று அரசியல் சாசன நிர்ணய சபையில் அண்ணல் அம்பேத்கர் விடுத்த எச்சரிக்கை இந்த தேர்தலுக்கு அதிகம் பொருந்தும். சாதி பெயரில் ஓட்டு  கேட்பதும் , சாதிக்காக ஓட்டளிப்பதும் இந்திய பிரதிநிதிகள் சட்டம் 1951 பிரிவு 123 (3)(3A) படி தவறு. தண்டனைக்குரிய குற்றம். இதை மக்களுக்கு தெரியப்படுத் தேர்தல் ஆணையம் ஏன் முன்வரவில்லை? வேட்பாளர் நடத்தை, அவரின் பொதுப் பணி, அவர் சார்ந்துள்ள அரசியல் கட்சியின் தேர்தல் அறிக்கை ஆகியவற்றை கருத்தில் கொண்டு வாக்களிக்க வேண்டும். நாம் அளிக்கும் வாக்கு நம் குழந்தைகள் எதிர்காலத்தையும் தீர்மாணிகப் பேகிறது. சாதியை கடந்து அருகமைப்பள்ளி்யில் கல்வி, சுகாதாரம் அகியவற்றுக்கான சாத்தியபாடுள்ள தேர்தல் அறிக்கையையும், இதற்காக தொடர்ந்து போராடிய கல்வியாளர்களை களம் இறக்கிவுள்ள அணியை பார்த்து வாக்களிப்போம். சமத்துவ சமுகம் படைக்க உறுதியேற்போம். யாருக்கும் வாக்கில்லை என NOTA வை அழுத்தினால் அது நியாயமற்றது, நம்மை, நாமே ஏமாற்றிக்கொள்வது. சிந்திக்கும் ஆற்றல் பெற்ற நாம் ஆராய்ந்து பார்த்து வாக்களிக்க முடியாதா? நூறு சதம் வாக்களித்தால் மட்டும் ஜனநாயகம் வென்றதாக அர்த்தம் கொள்ள முடியாது. சாதி , மதம் சார்பற்று நல்லாட்சி அமைய வாக்களிப்பதே ஜனநாயகத்தின் வெற்றி.  அத்தகைய ஜனநாயக கடமையை உணர்ந்து தமிழக மக்கள் வாக்களிக்க வேண்டும் என பொதுப் பள்ளிக்கான மாநில மேடை கோருகிறது.

No Caste / Religious consideration for voting. Cast your vote without fear or favour! An Appeal by State Platform for Common School System!

“In our social and economic life, we shall, by reason of our social and economic structure, continue to deny the principle of one man one value. How long shall we continue to live this life of contradictions? How long shall we continue to deny equality in our social and economic life? If we continue to deny it for long, we will do so only by putting our political democracy in peril. We must remove this contradiction at the earliest possible moment or else those who suffer from inequality will blow up the structure of political democracy which this Assembly had so laboriously built up” Dr. B. R. Ambedkar  after moving the Constitution Bill in the Constituent Assembly on 25th November, 1949. What he said on that day is more relevant in this Tamil State Legislative Assembly election 2016. Caste based canvassing or Caste based voting is a punishable  offence under  section 123 (3)(3A) of the Representative of People Act, 1951. Why this was not let known to general public by the Election Commission is a serious question. One should never consider Caste or Religion for selecting a candidate. Voter must evaulate a candidate by looking at her / his track record in social service, personal character and the manifesto of the political party she / he belongs. The vote that we are going to cast is also going to decide the future of our children. Let us look at the manifesto to find out whether education based on neighbourhood school is promised, good health and sanitation is promised. How serious the parties are in its implementation can be assessed by seeing the selection of candidates. The alliance which has fielded educationts who dedicated their life for the rights of children and their education is really serious and realistic about implementing it’s promises. The electorate must come forward to choose such an alliance . There is no meaning in stating that I shall not choose any one . I shall press NOTA. We are capable of thinking and evaulating. Can’t we choose a person who can contribute for establishment of an egalitarian society? Ensuring cent percent polling is not the success of democracy. Choosing a right candidate who will help in forming a reponsible government caring for the people’s welfare is the success of the democracy. State Platform for Common School System-Tamil Nadu, pleads with the people of Tamil Nadu to cast their vote with out fear or favour and without any Caste or religious consideration and contribute for establishment of the society of equals.

P.B. Prince Gajendra Babu General Secretary, SPCSS-TN.,
14-A, SolIappan Street, T.Nagar, Chennai – 600017
Mobile : 9445683660 Email: spcsstn@gmail.com.